Vishal-Actorமருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், ஒரேநேரத்தில் மிஷ்கினின் துப்பறிவாளன் மற்றும் சுராஜின் கத்தி சண்டை படங்களில் நடிக்கவுள்ளார். இதில் கத்தி சண்டை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட்டாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.