நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமாகிய நடிகர் விஷால் குறித்து சங்க உறுப்பினர்கள் எப்போதும் ஒரு சர்ச்சை கருத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களே மெச்சும் அளவிற்கு விஷால் பல நற்காரியங்களை செய்துவருகிறார்.

அவற்றில் முக்கியமாக நீட் தேர்வு எதிர்ப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக சங்கம் சார்பில் ஒரு தொகையை இழப்பீடாக கொடுத்துள்ளார்.vishal

மேலும் நன்றாக படிக்கும் ஏழைக்குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவிற்காக ஒரு தனி அமைப்பை நிறுவி நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வோரு நடிகர்கள் மூலமாகவும் ஒவ்வொரு ஏழை குழந்தைகளை கல்வி தத்தெடுத்தல் முறையில் தத்தெடுத்து அவர்களுக்கான முழுக் கல்விச் செலவுகளையும் ஏற்கும் திட்டத்தினை துவங்கியுள்ளார்.

இது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இது துவக்கம் மட்டும்தான் குழந்தைகளுக்கான பல சேவைகளை ஒவ்வொன்றாக துவங்குவோம் என்று விஷால் கூறியிருக்கிறார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நல்லது நடந்தால் சரி.