செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் விஷால்.. பலமாய் யோசிக்கும் புரடியூசர்.. என்னாகப் போகுதோ? ரசிகர்ஸ் புலம்பல்


மார்க் ஆண்டனி படத்தின் ஹிட்டை அடுத்து, அடுத்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில் கிடைத்த ஒரு பட வாய்ப்பை விஷால் டீல் செய்திருக்கும் விதம் தான் இப்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரத்தம். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவரது அடுத்த படம் எப்போது வெளியாகும், அப்பட த்தின் அப்டேட் எங்கே என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் விஷாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் அரசியலில் இறங்கலாமா? தன் ரசிகர் மன்றத்தை வைத்து அரசியல் கட்சி தொடங்கலாம், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை அலறவிட்ட விஷால்!

இந்த நிலையில் நடிகர் விஷாலைப் பற்றி பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி கூறிய தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வலைபேச்சு யூடியூப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது; ”பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி தரப்பில் இருந்து, விஷாலை அணுகியுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த விஷாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட தாக நினைத்து அவரை அணுகியிருக்காங்க. அப்போது விஷால், என் சம்பளம் ரூ.20 கோடி என்று கூறியிருகிறார். இவரிடம் வில்லனாக நடிக்க கேட்டு வந்த படத்துக்கு ரூ.18 கோடி சம்பளம் பேசிவிட்டு, ஹீரோவாக நடிக்க கேட்டு வந்த படத்துக்கு ரூ.20 கோடி கேட்டிருக்கிறார்.

இதற்கு சத்யஜோதி தரப்பில் ஓகே சொல்லிவிட்டு, அட்வான்ஸ் ரூ.5 கோடி தருவதாகவும், ஷூட்டிங்கில் 5 கோடியும், டப்பிங்கின்போது 5 கோடியும், ரிலீஸீன் போது 20 கோடியும் வழங்கிவிடுவதாக கூறியுள்ளனர். ஆனால், விஷால் முதலில் 10 கோடி தர வேண்டும். எனக்கு கமிட்மெண்ட் உள்ளது எனக் கேட்டு அடம்பிடித்து வருகிறாராம்.

துப்பறிவாளன் 2 – க்கு பிளான் போடும் விஷால்!

இந்த ரூ.10 கோடியை வைத்து விஷால் இயக்கி தயாரித்து வரும் துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் போக திட்டமிட்டிருக்கிறாராம். இந்த பத்து கோடியை கொடுத்தால் அவர் அப்படத்தில் நடிக்கப் போய்விட்டால் என்ன செய்வது” என சத்யஜோதி யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஷால் ஏன் வந்த வாய்ப்பை இப்படி செய்ய வேண்டும் என ரசிகர்ள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News