fbpx
Connect with us

“எஸ்.பி.பி – இளையராஜாவ வச்சி கச்சேரி நடத்தப்போறேன் ” விஷால் பேட்டி!

Vishal-Ilayaraja-SPB

News | செய்திகள்

“எஸ்.பி.பி – இளையராஜாவ வச்சி கச்சேரி நடத்தப்போறேன் ” விஷால் பேட்டி!

விஷால் வரும் ஏப்ரல் 2 ம் தேதி நடக்க இருக்கும் தயாரிப்பாளர் தேர்தலில் தலைவருக்கு நிற்கிறார்.

அது குறித்து அவர் பேசியபோது,’நான் யார் என்ன சொன்னாலும் ஐ டோ ண்ட் கேர், கண்டுக்க மாட்டேன். நான் என்ன பண்ணணும்கிற திட்டத்தை வச்சி இருக்கேன். ஒரு வருசத்துக்குள்ள, அதை செய்யலைன்னா, இப்பவே ஏப்ரல் 2018 தேதி போட்டு ஒரு ரிசைன் லெட்டர் ரெடி பண்ணி இருக்கேன். நான் ரிசைன் பண்றேன்.

என்னை எப்போதும் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய வெற்றியின் மூலமாக அவர்களுக்கு நான் பதில் சொல்லுகிறேன். ஒரு ப்ரொடியூசரா, இயக்குநரா ஒரு டைட்டிலை பதிவு பண்ண ஒரு மாசம் ஆகுது. இதை டிஜிட்டலில் கொண்டு வந்து ஒரு நிமிசத்தில இந்த வேலையே முடிக்க ஏற்பாடு பண்ணப்போறேன்.

இளையராஜாவை வைத்து ஒரு ம்யூசிக் ஷோ நடத்தப்போறேன். நான் ஜெயிக்கிறேன், இல்லைங்கிறது மேட்டர் இல்லை.இந்த ம்யூசிக் ஷோவை நான் பண்றேன் . பிரகாஷ்ராஜ் சார் ராஜா சார்கிட்ட போய் பேசிட்டார். எஸ்பிபி உட்பட எல்லா பாடகர்களையும் கூப்பிட்டு ஷோ நடத்தப்போறோம்” என்று சொல்லி இருக்கார் நம்ம அணி விஷால்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top