Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரசியலுக்கு அடிபோடும் புரட்சித் தளபதி.. வேண்டாத வேலை என கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் படித்தவர்களில் சிலர் அரசியலில் சாதித்துள்ளனர். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரும் அடங்குவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலகநாயகன் அவர்களும் முதலமைச்சர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம் சத்தமே இல்லாமல் தளபதி விஜய் தனது முதலமைச்சர் கனவை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது புரட்சித்தளபதி விஷால் டாப் கியரில் பயணம் செய்கிறார்.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய சங்கங்களில் தலைவர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சுலபமாக முதலமைச்சர் பதவியை அடைந்து விடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்.
அதன் வெளிப்பாடு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆக்ஷன் திரைப்படத்திற்கு கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என தனது மக்கள் நல இயக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் நடிகர் சங்க தேர்தலில்களில் அதிருப்தியில் இருந்த சினிமாக்காரர்களே இவருக்கு இது வேண்டாத வேலை என ஒதுங்கி உள்ளனர். மேலும் சிலர் இவருக்கு எம்ஜிஆர் என்ற நினைப்பு போல என்று கலாய்த்து வருகின்றனர்.
நெட்டிசன்கள்.. அவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.!

vishal-iyakkam
