Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரசியல் களத்தில் விஷால்! ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்
விஷால் தனது சினிமா வாழ்க்கையை அர்ஜூனின் துணை இயக்குனராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அவர் நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி பல வெற்றிப்படங்களை குவித்துள்ளார். செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இவருக்கு அரசியல் ஆசை இரண்டு மூன்று வருடங்கள் முன்னரே வந்து விட்டது. அதில் ஒரு பகுதிதான் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட தயார் ஆனது. இதில் பெரும் சவாலாக இருந்தது அரசியல் உள்நோக்கத்திற்காக அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனுடைய விளைவு தான் என்னவோ 2019ம் ஆண்டு ஒரு புதிய நியூஸ் சேனலை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதை பற்றி அவர் கூறுகையில் எம்எல்ஏ, எம்பி சம்பளம் வாங்கியும் ஏன் இப்படி ஒரு வேலை செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் பல கேள்வி இதன் மூலம் வெளி வரும் என்று அரசியல் வட்டாரங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Vishal
சும்மா இருப்பாரா உசுப்பேத்தி விட்டு இப்போ ஒரு விஸ்வரூபமாக அவதரிக்கும் நமது விஷால் மற்ற நடிகர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்.. சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இறுதியில் சினிமா துறையை முழுமையாக அரசியலை ஆளப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் கூறுவது போல் வாழ்வது யாராயிருந்தாலும் ஆள்வது தமிழனாக இருக்க வேண்டும் என்ற கோட்பாடை மக்கள் ஏற்பார்களா என்று பார்ப்போம்.
