Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆக்சன் படத்தை பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள்.. 50 கோடி தயாரிப்பாளரின் கதி என்ன?
தற்போதைய நிலைமையில் தமிழ் சினிமாவில் பிரமாண்டத்தின் போக்கு அதிகமாக தென்படுகிறது. பெரிய ஹீரோக்களை வைத்து பிரம்மாண்டத்தில் படமெடுக்கும் தயாரிப்பாளர்களே திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிறிதளவு மார்க்கெட் வைத்துள்ள ஹீரோக்களுக்கு 50, 60 கோடி பட்ஜெட் படங்கள் தேவையா.
அப்படியே பிரம்மாண்ட முறையில் படங்கள் எடுத்தாலும் அதன் ரிலீஸ் தேதி என்ற ஒன்று கண்டிப்பாக தொடர் விடுமுறை நாட்களை சார்ந்ததாக இருக்கவேண்டும். அந்த வகையில் தீபாவளிக்கு வெளிவந்த இரண்டு படங்களும், பொங்கலுக்கு வெளிவந்த இரண்டு படங்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தொடர் விடுமுறை நாட்களில் வந்ததால் கணிசமான அளவு லாபத்தை ஈட்டி விடும். ஆனால் இந்த வாரம் வெளிவந்து இருக்கும் ஆக்ஷன் மற்றும் சங்கத்தமிழன் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களை கவராத வகையில் உள்ளது.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரை வாங்கி விட்டது. ஆனால் ஆக்சன் படத்தை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று தியேட்டர்காரர்கள் குழம்பிப் போயுள்ளனர். காரணம் 50 கோடி பட்ஜெட்டில் உப்பு சப்பில்லாத கதையை எடுத்தது தான்.
இன்றைய கால கட்டத்தில் கண்டிப்பாக ரசிகர்கள் கூட்டம் இல்லாத ஹீரோக்கள் சுமாரான கதையை வைத்து லாபம் ஈட்டலாம் என்று நினைப்பது தவறான ஒன்று. சினிமா எடுப்பவர்களை விட பார்ப்பவர்கள் புத்திசாலி என்பதை உணர்ந்துகொண்டு படங்களை இயக்க வேண்டும்.

action-status
சுந்தர் .சி சார்.. சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.!
