fbpx
Connect with us

Cinemapettai

விஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்

vishal-ajith

News | செய்திகள்

விஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்

விஷால் முயற்சி வெற்றிபெறுமா?

புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால். பெரும் பிரச்சனைகளை சந்திப்பதை வேலையாக இருக்கிறது. நடிகர் சங்க பிரச்சனை ஆரம்பித்து தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை வரை நீண்டு கொண்டேதான் செல்கிறது.

ஆனாலும் விடாமல் துரத்திக்கொண்டே போராடிக் கொண்டிருக்கிறார் விஷால். அவர் எப்பொழுது தவறு செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நடிகர் சங்க முன்னாள் தலைவர்களும் சில அரசியல் கட்சி தலைவர்களும்.

தற்பொழுது இளையராஜா75 நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்குள் அவருக்கு பல சோதனைகள் வந்துவிட்டன. இதனால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி அடைந்தே தீரவேண்டும். அதற்குதான் முதலில் ரஜினிகாந்த் பின்பு கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களை அழைத்திருக்கிறார். விஜயும் இதில் பங்கு பெறுவார் என செய்திகள் வந்துள்ளது.

ஆனால் அஜித் இதில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. விஷாலும் கண்டிப்பாக அழைப்பு விடுப்பார். ஷாலினி தீவிர இளையராஜாவின் ரசிகை என்பதால் அஜித் சார்பில் ஷாலினி கலந்து கொள்வார் எனவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மட்டும் அஜித் கலந்து கொண்டால் கண்டிப்பாக இது ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாறிவிடும். ஏனென்றால் விஜயகாந்த் அழைத்து அஜித் வராதவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?.

எது எப்படியோ, விஜயகாந்த் கலைநிகழ்ச்சி நடத்தி வெற்றி பெற்று நடிகர் சங்க கடனை அடைத்தது போல் விஷாலும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி பணப்பிரச்சனைகளை முடிப்பார் எனவும் தோன்றுகிறது.

vishal

vishal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top