Connect with us
Cinemapettai

Cinemapettai

arjun

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘விஷாலை ஹீரோவாக்கி நான் வில்லனாகி விட்டேன்’ அர்ஜுன்

விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர் கூறுகையில், “இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கும், நல்ல விமர்சனம் வந்ததற்கும் நன்றி.

நானும், விஷாலின் தந்தையும் நல்ல நண்பர்கள். அவர் தான் விஷாலை என்னிடம் அறிமுகம் செய்து வைத்து, என்னிடம் துணை இயக்குனராகவும் சேர்த்துவிட்டார் முதலில் விஷால் என்னிடம் படங்களை எப்படி இயக்குவது என்று கற்றுக்கொள்ள தான் வந்தார் ஆனால் ஒரு ட்ரையல் வெர்ஷனில், ஒரேயொரு காட்சியில் மட்டும் விஷாலை நடிக்க சொன்னேன்.

விஷாலும், நடித்தார். அதைப் பார்த்த பிறகு தான் எனக்கே அவரை ஒரு நடிகராக்க வேண்டும் என்று ஆசை தோன்றியது. இதை, அவரது தந்தையிடமும் கூறினேன். அதன்பின், அவர் தயாரித்த செல்லமே படத்தில் நடிக்க வைத்தார். படமும் நல்ல ஹிட். இப்படி தான் அவர் ஒரு ஹீரோவானார்.

தற்போது ஒரு நடிகைரைத் தொடர்ந்து தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இப்படியிருந்த நிலையில், அவருடைய படத்தில் அவருக்கே வில்லனாக நடித்திருக்கிறேன்” என்று பெருமையுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top