அநியாயத்தை கண்டால் அதை தைரியமாக தட்டிகேட்பவர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது திருட்டு விசிடியை ஒழிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் சொகுசு பேருந்தில் ‘விஜய்யின் தெறி’ படம் திரையிடப்பட்டதாக, விஷால் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் போலீசாரும் அப்பேருந்தின் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் பேருந்தில் இருந்த பல புதிய திரைப்பட சீடிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.