vishalஅண்மைகாலமாக விஷால் நடிகர் சங்கம் மூலமாகவும், தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாகவும் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்.இந்நிலையில் 68 வயதான கவிஞர் காளிதாசன் 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவ செலவுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறார்.இதனை அறிந்த விஷால், தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.

அதிகம் படித்தவை:  விஷால் நீக்கம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

இத்தொகையை காளிதாசனின் மனைவி திலகவதியிடம் விஷால் நற்பணி இயக்கத்தினர் வழங்கினர்.இவர் ரஜினியின் அருணாச்சலம் படம், பிரசாந்தின் வைகாசி பொறந்தாச்சு போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சூர்யாவை தொடர்ந்து விஷால்

அதோடு தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.