fbpx
Connect with us

விஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்!

vishal ayyokiya

Celebrities | பிரபலங்கள்

விஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்!

விஷாலுக்கு குவியும் பாராட்டுகள். உதவிக்கரம் கொடுத்த  மக்கள்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விஷால் . இவர் சமீப காலமாக பல உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். இவர் சன் டிவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சண்டகோழி-2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் “கம்பத்து பொண்ணு” எனும் பாடல் பெரும் வரவேற்பு பெற்றது.

விஷாலின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் அயோக்கிய. இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் பல சர்ச்சைகளை சந்தித்தது. விஷாலின் சர்ச்சைக்குரிய அந்த ஃபர்ஸ்ட் லுக்கை நீக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கூறினார். அந்தக் காட்சிக்கான காரணங்களை விஷால் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.

சன் டிவி தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ள நடிகர் விஷால் அந்நிகழ்ச்சியில் வரும் ஏழை குழந்தைகளின் கவலைகளையும் நடுத்தர மக்கள் சந்திக்கும் அவலங்களையும் எடுத்துக் கூறி வருகிறார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் பெறாமல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் மக்களிடையே நேரில் சென்று கஷ்டப்படும் மக்களுக்காக உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கும் ஒரு படி மேலாக சென்று Global Health City நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தி உள்ளனர். இதில் ஆயிஷா என்ற 8 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, 1915 மக்கள் உதவி செய்துள்ளதாக அவர்களை பாராட்டியுள்ளார் விஷால். இந்த சிகிச்சைக்காக 21 லட்சம் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உதவிகளை செய்வதற்கு மக்கள் முன் வரவேண்டும் என்பதே விஷாலின் முக்கிய கோரிக்கை ஆகும். சினிமா பேட்டை சார்பாக நடிகர் விஷாலுக்கு வாழ்த்துக்கள்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Celebrities | பிரபலங்கள்

Advertisement

Trending

To Top