Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவசாயிக்காக டிராக்டர் கடனையெல்லாம் அடைச்சாரேப்பா…? விட்ருங்க ப்ளீஸ்!

விஷால் சொல்லாத விஷயத்தையெல்லாம் சொன்னதாக கிளப்பிவிட்ட கும்பல் இன்னும் இன்னும் என்று எதையெதையோ உருவாக்கிக் கொண்டிருக்க, எப்படி சமாளிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறார் அவர்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி டிராக்டர் கடனை அடைக்க முடியாமல் இருந்த போது அவரது டிராக்டரை பறிமுதல் செய்தது கம்பெனி. அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் அவர். மிக மிக ஷாக்கிங்கான இந்த விஷயம் செய்தித் தாளில் வந்த அடுத்த நாளே அந்த டிராக்டர் கடனை நானே அடைக்கிறேன் என்று அடைத்தார் விஷால். விவசாயி ஒருவருக்காக முதல் கரம் நீட்டிய நடிகர் சமீப காலத்தில் விஷால்தான்.

சென்னையில் குடி போதையில் ஒரு பெண் காரை ஒரு ஏழை தொழிலாளி மீது ஏற்றிவிட அந்த நபர் ஸ்பாட் அவுட். இரண்டு குழந்தைகளோடு கதறி நின்ற குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி அக்குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பெருந் தொகை ஒன்றை வங்கியில் டெபாசிட் செய்தார் விஷால்.

அவரது நிஜ முகம் இப்படியிருக்க, இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போட்டு வாட்டி எடுக்குறாங்களே… என்று சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். விவசாயிக்காக டிராக்டர் கடனையெல்லாம் அடைச்சாரேப்பா…?விட்ருங்க ப்ளீஸ்! என்று கெஞ்சுகிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top