விஷால்

விஷாலை பொறுத்தவரை நம் தென் இந்திய சினிமாவில் ஆல் இந்த ஆல் அழகு ராஜா.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவருபவர். நம் கோலிவுட்டில் தயாரிப்பு, நடிப்பு என்ற இரண்டு துறையிலும் அசத்துபவர். மேலும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களிலும் முழு வீச்சாக ஈடுபடுபவர். ஆர் . கே நகர் வாயிலாக அரசியலில் நுழைவதற்கும் திட்டமிட்டார், எனினும் அது எடுபடவில்லை.

vishal
vishal

இந்நிலையில் டெல்லியில் சண்டக்கோழி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் உடல் நலம் குன்றியதாக செய்திகள் பரவியது. மேலும் தோள்பட்டை மற்றும் மூட்டு வலியால் அவதி படுகிறார். டெல்லியில் மருத்துவமனையில் தீவர சிகிச்சை பலன் அளிக்காமல், அமெரிக்கா சென்றதாக தகவல்கள் கசிந்தது.

vishal

இந்நிலையில் தன் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் விஷால்.

“நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நான் நலமாக இருக்கிறேன் என்பதை என் நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும் காரணத்திற்காக சிகிச்சை பெற்றுள்ளேன், சில நாட்களில் அது முடிந்து விடும் . மார்ச் மாதம் முதல் வாரத்தில் என் வேலைகளை துவக்கிவிடுவேன். விரைவில் சிந்திப்போம் ,”

vishal
vishal

சினிமாபேட்டை கிசு கிசு

எனினும் இந்த டீவீட்டில் தான் அமெரிக்காவில் உள்ளாரா அல்லது டெல்லியில் இருக்கிறாரா என்ற தெளிவான பதில் இல்லை என்பது தான் நம்மை மேலும் குழப்புகிறது.