Connect with us
Cinemapettai

Cinemapettai

vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் ஆளாக சம்பளத்தை குறைத்த விஷால்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

கோலிவுட்டின் முன்னணி நாயகனான விஷால் தன் அடுத்த படத்திற்கு எப்போதும் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலின் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதில் இருந்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

49 நாட்களுக்கு மேலாக புதிய படங்களின் வெளியீடு நிறுத்து வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 15 நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புகளும், திரை நிகழ்ச்சிகள் கூட நிறுத்தப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டமும் கைவிடப்பட்டது.

இதையடுத்து, தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நடிகர்களின் சம்பளம் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அட்வான்ஸாக சிறு தொகையை வாங்கி கொண்டு, படம் முடிந்ததும் மீதி சம்பளத்தை வாங்கி கொள்ளுங்கள் எனத் தெரிவித்தனர். இதற்கு பல நடிகர்கள் ஆதரவு கொடுத்தாலும், உங்களை நம்பி எப்படி படம் செய்வது என ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது அடுத்த படத்திற்கு சம்பளத்தை வெகுவாக குறைத்து இருக்கிறார். அட்வான்ஸாக குறிப்பிட்ட பணத்தை தற்போது வாங்கி இருக்கும் அவர், மீதி சம்பளத்தை படம் முடிந்ததும் வாங்கி கொள்ள முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய இரும்புத்திரை சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து, ‘டெம்பர்’ எனும் தெலுங்குப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

ஜூனியர் என்.டி,ஆர் நடித்த கதாபாத்திரத்தை விஷால் ஏற்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. படத்திற்கு அயோக்யா எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட்மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து லைட் அவுஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாய் சொல் வீரனாக இல்லாமல் கோரிக்கையை முதல் ஆளாக நிறைவேற்றி இருக்கும் விஷாலுக்கு கோலிவுட்டில் பாராட்டுகள் அதிகரித்து இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top