Vishal-Suresh Kamatchi

“நெருப்புடா” பட ஆடியோ வெளியீட்டில் நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பேசினார். அப்போது,’பத்திரிகையாளர்கள், சமூகவலைத்தள விமர்சகர்கள் படம் ரிலீசான மூன்று நாளைக்கு அப்புறம் தான் படத்தினை விமர்சனம் செய்ய வேண்டும் என்று பேசினார்.

அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,’ படம் நம்மோடதுதான். ஆனால், பத்திரிக்கையின் சுதந்திரத்தில் தலையிட உரிமை நமக்கு கிடையாது. ரிலீசுக்கு 2 நாளைக்கு முன்ன கூப்பிட்டு படத்தை போட்டு காட்டறது நாமதான்.

விமர்சனங்கள்3 நாளுக்குள் வரலைன்னா,  தியேட்டரில் படம் இருக்காது. ஜோக்கர், மாநகரம், துருவங்கள் 16, கடுகு, 8 தோட்டாக்கள், இருமுகன், கபாலி என்று பல படங்கள் விமர்சனங்களால் ஓடின.

நாம நல்ல படம் எடுக்கணும். விமர்சனத்தை மூணு நாள் கழிச்சி போடுன்னா, படம் பற்றிய ப்ரோமோஷனையும் அவர்கள் ஏன் தொடர்ந்து செய்யணும்? படம் ரிலீசுக்கு பிறகு செய்யலாமே?

எவ்வளவோ நல்ல விமர்சனங்களை தரும்போது கண்டுகொள்ளாத நாம், விமர்சிக்கும்போது கண்டிக்க கூடாது. நாம் தான் நல்ல படங்களை தரணும். சினிமா வியாபாரத்தை ஒழுங்குபடுத்தணும்.

சின்ன படங்கள் விமர்சனத்தால் பிழைக்கின்றன. பெரிய படங்கள் வாய்வழி பரவலில் தோல்வியாகிறது.” என்று சுரேஷ் காமாட்சி விஷாலை ஒரு பிடி பிடித்துள்ளார்.