ரசிகர்களுக்கு சமீபத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அடுத்த பட அப்டேட் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்த நேரத்தில் திடீரென marriage அப்டேட் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷுடன் பல நடிகர்களை இணைத்து வைத்து ஏற்கனவே ரசிகர்கள் திருமணம் வளைகாப்பு என்று எல்லாம் நடத்திவிட்டனர்.
திருமண வதந்திகளுக்கு பதில் சொல்லி நடிகை கீர்த்தி சுரேஷும் tired ஆகிவிட்டார். இந்த நிலையில், தற்போது வந்ததும், அப்படியான ஒரு வதந்தியாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், இல்லை நான் திருமணம் செய்யப்போகிறேன். திருப்பதியில் எனது திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட விஷால் குடும்பத்தினர்
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், விஷால் பற்றிய ஒரு ஸ்வாரஸ்ய தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. சண்டைக்கோழி 2 படத்தில், விஷால் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துக்கொண்டிருந்தபோது, விஷாலின் குடும்பத்தினருக்கு இவர்கள் ஜோடி மிகவும் பிடித்திருந்தது.
அதனால், இயக்குனர் லிங்குசாமியிடம் கீர்த்தியிடம் கேட்டு பாருங்களேன்.. அவருக்கு விஷாலை பிடித்திருக்கிறதா என்று கேட்டு இருந்தார்களாம். ஆனால் அப்போது கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
“சாரி.. நான் சின்ன வயதிலிருந்தே, அன்டனி எனும் நபரை காதலித்து வருகிறேன். அவரை தான் திருமணம் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டாராம். இது விஷால் குடும்பத்தினருக்கு சின்ன ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
அதன் பின்னர், கீர்த்தி சுரேஷுக்கு பலமுறை நெட்டிசன்கள் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனாலயே இந்த முறை வந்ததும் வதந்தி தான் என்று மக்கள் கடந்து போக, கீர்த்தி சுரேஷே ஒப்புக்கொண்டுவிட்டார் . தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து அடுத்த ஸ்ரீதேவி ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார்.