Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷால் நிச்சயம் பண்ண பொண்ணுக்கு வேறு திருமணம்.. எல்லாம் அந்த நடிகையின் வீடியோவால் வந்த வினை!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். விஷால் நடிப்பில் அடுத்ததாக சக்ரா படம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டம் வரை பேச்சுலர்கள் ஆக கல்யாண வயதை தாண்டியும் நண்பர்களாக இருந்தவர்கள் விஷால் மற்றும் ஆர்யா.
ஆனால் ஆர்யா பிரபல இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதனை தொடர்ந்து விஷாலும் தொழிலதிபர் மகளை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென விஷாலை கல்யாணம் செய்ய மாட்டேன் என தொழில் அதிபரின் மகள் கட்டையைப் போட்டு கல்யாணத்தை தடுத்து நிறுத்தினார்.
அதற்கு காரணம் விஷால் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோரது காதல் தான் எனவும், இருவரும் நெருங்கி இருந்த வீடியோ ஒன்று அந்த பெண்ணுக்கு கிடைத்ததால் திருமணத்தை நிறுத்தி விட்டார் என்றும் சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு விஷாலும் அந்த தொழிலதிபர் குடும்பத்தினரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டு அவர்களது வேலையை பார்க்கச் சென்றுவிட்டனர். தற்போது அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு தொழிலதிபர் மகனுடன் திருமணம் நடக்க உள்ளதாம்.

vishal-anisha-cinemapettai
இதனை அறிந்த நடிகர் விஷால் மிகவும் சோகமாக உள்ளாராம்.
