fbpx
Connect with us

நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி!

News | செய்திகள்

நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி!

ரவுண்ட் டேபிள் இந்தியாவின் ‘தமிழகத்தின் பெருமை’ விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்துப் பேசினார்.

விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

14 வெவ்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்த விருது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் www.prideoftamilnadu.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.

வாழ்க்கையில் வெவ்வேறு துறையில் பயணிக்கும் 8 ஜாம்பவான்களை ‘தமிழகத்தின் பெருமை’ விருதுகளுக்கான நடுவர்களாக அறிவித்துள்ளது ரவுண்ட் டேபிள் இந்தியா.

அந்த நடுவர்கள்: டாக்டர் மரியஜீனா ஜான்சன், லதா ராஜன், சிம்ரன், முகமது ஆசிப் அலி, சந்திர பாரதி, ஹேமா ருக்மணி, சந்தோஷ் பாபு, நிர்மலா லக்ஷ்மணன்.

Continue Reading
Click to comment

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Advertisement

அதிகம் படித்தவை

To Top