நடிகர் விஷால் சண்டக்கோழி மற்றும் இரும்புத் திரை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் முதல்முறையாக அர்ஜுனிடம் துணை இயக்குனராக இருந்தவர். அதன் பின்பு தனது இயக்குனர் ஆசையிலிருந்து நடிகராக அவதரித்தார்.

ஆனால் ஒரு சில படங்களில் அவர் இயக்குனரோடு இணைந்து பல மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளார் என்பது சினிமா வட்டாரங்கள் அறிந்ததே. இவர் இப்பொழுது புது முயற்சியாக இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் 2019ஆம் ஆண்டு எடுக்கப்படவுள்ளதாகவும் அது முழுமையாக தெரு நாய்களை வைத்து எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் அஜித்-விஜய் உண்டா? விஷால் விளக்கம்

விஷால் ஐந்தறிவு ஜீவராசிகளிடம் மிக அன்பாக இருப்பார் என்றும் ரோட்டில் ஏதாவது நாய்கள் அடிபட்டாலோ அல்லது உடல்நிலை குறைவு இருந்தாலும் அதை எடுத்து மருத்துவமனைக்கு சென்று அதனை குணமடைய வைக்க செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இப்படத்தின் மையக் கருத்தாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஷால் அவர்கள் சின்னத்திரையும் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.