Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிஷ்கின் ஸ்க்ரிப்டில் ஒரு மண்ணும் புரியல.. மாட்டிகிட்டு முழிக்கும் விஷால்
கடந்த சில வருடங்களாக வெளியான விஷால் படங்களில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது. மற்ற அனைத்துமே மண்ணைக் கவ்வியது அனைவரும் அறிந்ததே.
மீண்டும் மிஷ்கினை வைத்து வெற்றி கொடுத்து விடலாம் என எண்ணி துப்பறிவாளன் 2 என்ற படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் வந்தார் விஷால். அங்குதான் ஏழரை சனி எட்டிப் பார்த்துள்ளது.
கதைப்படி லண்டனில் நடக்கும் துப்பறியும் சம்பவம் தான் படத்தின் ஹைலைட். ஆனால் அதற்காக மிஸ்கின் அதிக அளவு பணம் செலவு செய்கிறார் என்றும், அளவுக்கு அதிகமாக சம்பளம் கேட்கிறார் எனவும் மேலும் ஹைலைட்டாக மிஸ்கின் படப்பிடிப்புக்கான வேலைகளை செய்யாமல் மற்றதில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும் அறிக்கை மேல் அறிக்கை விட்டார் விஷால்.
அதுமட்டுமல்லாமல் மிஷ்கினுக்கு இனி யாரும் படம் கொடுக்க கூடாது எனவும் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழ் சினிமா உலகமும் நீ என்னத்தையாவது உளறிட்டு இரு என விஷாலை மதிக்காமல் மிஷ்கினுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கொடுத்து வருகின்றன.
சரி, துப்பறிவாளன் 2 படத்தை நாமே இயக்கலாம் என மிஸ்கின் ஸ்கிரிப்ட்டை வாங்கி பார்த்தாராம். பார்த்த உடனேயே ஒரு நிமிஷம் தலை சுத்தி விட்டதாம். என்ன எழுதி இருக்காங்க, என்ன கதை, என்ன சீன் என்று ஒண்ணுமே புரியவில்லையாம்.
விஷால் ஏற்கனவே நடிகர் அர்ஜுனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது. தேவையில்லாம வாய்விட்டு விட்டோமோ என வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாராம் விஷால்.
