விஷால் நடிகர் சங்கத்தில் பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார். இதுமட்டுமின்றி கஷ்டப்படும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் நிலம் வாங்கி விரைவில் அவரே விவசாயம் செய்யவுள்ளாராம், மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சியே விவசாயி கையில் தான் உள்ளது.அதேபோல் இனி ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துக்கொள்ள கூடாது எனவும் கூறியுள்ளார்.