ajith-vijai_cinemapettai

தயாரிப்பாளர் சங்க  தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய விஷால், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்காக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளார்.

அதன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைளை வைத்துள்ளார். அந்த கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜுன் 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விஷால் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில் மத்திய மாநில அரசுகள் அவருடைய கோரிக்கைகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. அதனால் வேலை நிறுத்தம் நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விவசாயிகளுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் ரூ.2 கோடி நன்கொடை... நெகிழச் செய்யும் மூத்த நடிகர்

வேலைநிறுத்தம் என்றால் படவேலைகள் முடக்கம், ரிலீஸ் கிடையாது, படப்பிடிப்பு கிடையாது, எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என எந்த போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

அவ்வாறு வேலைநிறுத்தம் நடந்தால், அதிக பட்ஜெட் செலவில் தயாராகி வரும் அஜித்தின் விவேகம், விஜய்யின் தளபதி 61 போன்ற படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடங்கும். அதனால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியுமா? என்ற சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் விஷால் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விசுவாசம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.! யார் தெரியுமா?

மேலும், 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்று திரையுலகில் நடந்த வேலை நிறுத்தத்தால் பணியாளர்கள் அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடிய சம்பவம், விஷாலின் இந்த முடிவால் மறுபடியும் தங்களுக்கு வந்துவிடுமோ என்று பணியாளர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.