Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை பண்ணிய விஷால்! நறுக்கென்று குட்டு வைத்த விஜய்சேதுபதி
கத்திசண்டை படத்தில் தொடங்கிய பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை. 96
படத்தின் தயாரிப்பாளர் தான் கத்தி சண்டை படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு இரண்டு கோடி ரூபாய் பாக்கி உள்ளதாம். அதனை வட்டியுடன் சேர்த்து மூன்றரைக் கோடி ரூபாய் பணத்தை எடுத்து வைத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என கடைசி நேரத்தில் திகிலைக் கிளப்பி உள்ளார் விஷால்.

Vishal
விஜய்சேதுபதி மிகவும் ரசித்து ரசித்து நடித்த படம் 96. இந்த படத்தின் பிரிவியூ ஷோ பத்திரிகையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி தள்ளிவிட்டனர். விஜய்சேதுபதி, திரிஷாவின் நடிப்பு மிகவும் அழகாக இருந்தது. கண்டிப்பாக இந்த படம் ஓடும் என விமர்சனங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் ரசிகர்களும் தியேட்டர் டிக்கெட்டுகளை ஹவுஸ் புல்லாகி வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த பணப் பிரச்சினை விஜய்சேதுபதிக்கு மிகுந்த வருத்தம் அளித்துள்ளதாம். கண்டிப்பாக இந்த படம் ரிலீஸாக வேண்டும் என தனக்கு வர வேண்டிய சம்பளம் மேலும் ஒரு கோடி ரூபாய் என நாலரை கோடி ரூபாய் பணத்தை போட்டு விஷால் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்துள்ளார்
தயாரிப்பாளர் சங்கத் தலைவரே ஒரு படம் ரிலீசாக போவதை தடுப்பது விஷாலின் மேல் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
