தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் வைத்த புகார்ப்பெட்டியில் விழுந்த முதல் புகாரே விஷால் மீதுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நடிகர் சங்க செயலாளர் ஆனபோதும் சரி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனபோதும் சரி… பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நடவடிக்கைகளை சிலர் எதிர்த்தாலும், பல நடவடிக்கைகளை பாராட்டி ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக, சமீபத்தில் பெப்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை திரையுலகமே பாராட்டியது.vishal

அதிகம் படித்தவை:  பிரபல தொலைக்காட்சியிடம் பெரிய தொகைக்கு விலைபோன நட்சத்திர கிரிக்கெட் !

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்ப்பெட்டி ஒன்றை நேற்று வைத்துள்ளார் விஷால். மற்றவர்கள் மீது நேரடியாகக் கூற முடியாத புகார்களை, இந்தப் பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் போடலாம் என்பது அவருடைய எண்ணம். ஆனால், இந்தப் பெட்டியில் விழுந்த முதல் புகாரே விஷாலைப் பற்றித்தான் என்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஷாலின் அடுத்த அதிரேடி..! அணைத்து tv சேனல்களும் மூடப்படுமோ ???

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கார்த்தி என சூர்யாவின் சொந்தக்காரர்கள் பிடியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இருப்பதாகவும், விஷால் அதைக்கண்டு கொள்ளவில்லை என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாம்.