“நான் அரசியல்வாதியாக தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதியாகவே போட்டியிடுகிறேன்.”- நடிகர் விஷால்.

vishal
vishal

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 38-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று  பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,  உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கலுக்காக மட்டும்  42 சுயேச்சை வேட்பாளர்கள் வந்திருந்தனர்.

திடீரென அரசியல் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தனது ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் பைக்கில் அலுவலகத்திற்கு வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவற்கு முன்பு, தி.நகரில் உள்ள காமராஜர் சிலை, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை, சிவாஜி சிலை, அண்ணா நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் ஆகிய இடங்களுக்கு நடிகர் விஷால் சென்றார். அங்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி பாகுபாடின்றி இருப்பதை வெளிப்படுத்தவே அனைத்து தலைவர்களுக்கும் நடிகர் விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது வேட்பு மனுவில் விஷால் விசில் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி இல்லாத சூழ்நிலையில் காரம் போர்டு  அல்லது படகு சின்னம் ஒதுக்குமாறு விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அரசியல்வாதியாக தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதியாகவே போட்டியிடுகிறேன். ஆர்.கே.நகர் மக்களின் அடிப்படைத் தேவை என்ன? பிரச்னைகள் என்ன? அவை இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளன? இது பற்றி யாரிடம் கேட்பது? இதற்கெல்லாம் விடையாக இத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here