விஷால் துப்பறிவாளன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து இரும்புகுதிரை படத்தில் நடித்து வருகிறார். ஆனால் லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த சண்டக்கோழி படம் ட்ராப்பானதாக சமீபகாலமாக சில தகவல்கள் சுற்றிவந்தது.

மே 14 ஆன நேற்று விஷால் தன் பிறந்தநாளை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.

ரேனிகுண்டா, வாலு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சக்தி தற்போது விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் பணியாற்றியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் சண்டக்கோழி படத்தில் தான் பணியாற்றவுள்ளாராம். விரைவில் சூட்டிங் ஆரம்பமாக போகிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.