fbpx
Connect with us

Cinemapettai

நட்சத்திர கிரிக்கெட் சர்ச்சைகள் குறித்து விஷால் அதிரடி பதில் !

News | செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் சர்ச்சைகள் குறித்து விஷால் அதிரடி பதில் !

ajith-vishalதென்னிந்திய நடிகர் சங்கக் நடத்திய கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து மைதானத்தில் அஜித் படப்பாடலான ஆலுமா டோலுமா ஒலிபரப்பப் பட்டதாகவும், அதனை நடிகர் விஷால் உடனடியாக நிறுத்தச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே, நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜித் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாகவே அவரது பாடலை பாதியில் விஷால் நிறுத்தியதாக செய்தி வெளியானது.

அதுமட்டுமின்றி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்வியடைந்ததற்கு தமிழக மக்களே பொறுப்பு என விஷால் கூறியதாக பேட்டி ஒன்று உலா வந்தது. இதைக் கண்டு ரசிகர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.

இந்நிலையில், இவற்றிற்கு தற்போது நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு செய்தி, நான் அஜீத்தின் பாடலை நிறுத்தச் சொன்னதாகக் கூறுகிறது. இன்னொன்றில், நான் சொன்னதாக ஓர் அபத்தமான பேட்டி வெளியாகியுள்ளது.

இவை மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. நான் சொல்லாத ஒன்றை எப்படி என்னுடைய கருத்தாகப் பிரசுரிக்கலாம்” என விஷால் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top