Vishal_ProducersCouncil

நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் பல சிக்கல்களுக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றியும் பெற்று தலைவராகிவிட்டார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற அவரது அணியினர் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அவரை சந்தித்தனர். சந்திப்பு முடிந்ததும் பேசிய விஷால் இளையாராஜாவை சந்தித்தது எங்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படுவோம்.

சென்னையில் பிரம்மாண்ட அளவில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி சமர்ப்பணம் செய்யவுள்ளோம். தயாரிப்பாளர் சங்க பதவி ஏற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சங்கத்தை சேர்ந்த அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொள்ள வேண்டும் என கூறீயுள்ளார்.