தமிழ் சினிமாவில் இந்த திருட்டு விசிடி பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கு எதிராக விஷால் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் மருது படம் வரவிருக்க, இதற்காக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இதில் பேசிய விஷால், ‘திருட்டு விசிடி விஷயத்தில் நான் மட்டும் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.தயாரிப்பாளர் சங்கம் எந்த விதத்திலும் இதற்காக குரல் கொடுப்பது போல் தெரியவில்லை, இனி இதுக்குறித்து எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் கலைப்புலி தாணுவை கேளுங்கள்’ என்று கோபமாக பேசினார்.