Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்ரீரெட்டியிடம் சீறிய விஷால்… ஏன் தெரியுமா?

நானியை தவறாக பேசிய ஸ்ரீரெட்டி வார்த்தையை அளந்து பேச வேண்டும் என தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.
கோலிவுட் பிரபலங்களையே ஆபாச படங்களால் அலற விட்டது சுசி லீக்ஸ். பாடகி சுதித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து கோலிவுட் நடிகர்களான தனுஷ், த்ரிஷா, சஞ்சிதா ஷெட்டி, டிடி உள்ளிட்டோரின் கிளாமர் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சுசித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கணவரே தெரிவித்தார். தொடர்ந்து, சில தினங்களில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பின்னர், அவர், தன் கணவருடன் இணைந்து தனது ட்விட்டரை யாரோ ஹாக் செய்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது ஓய்ந்து ஒரு வருடம் ஆகவில்லை மீண்டும் தலைத்தூக்கி விட்டது லீக்ஸ் பஞ்சாயத்து.
ஆனால் இந்த முறை மாட்டியது கோலிவுட் இல்லை டோலிவுட் தான். தெலுங்கில் துணை நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. அவர் தெலுங்கில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக அதிரடியாக தெரிவித்தார். தொடர்ந்து, பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் அந்தரங்க சாட்கள் வெளியாகியது. இதனால் அவரின் நடிகர் சங்க அட்டை ரத்து செய்யப்பட்டது. இதனால், கடுப்பான ஸ்ரீ ரெட்டி நடிகர் சங்க அசோசியன் முன் அரை நிர்வாணமாக போராட்டத்தில் இறங்கினார். இருந்தும் அது தெலுங்கு திரைத்துறையில் யாரையும் அதிர செய்யவில்லை. அப்போது தான் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய குடும்பமும், டாப் ஸ்டார் ராணாவின் தம்பி அபிராமின்அந்தரங்க புகைப்படங்களுடன், ஆபாச சாட்களும் வெளியாகியது. இது பலரை ஆடச் செய்தது.
இதை தொடர்ந்து, ஸ்ரீ லீக்ஸ் பஞ்சாயத்தில் சிக்கியவர் நானி. சமீபத்திய ட்வீட்டில், என்னுடன் படுக்கவில்லை என உன் குடும்பத்தின் மீதும், கேரியர் மீதும் சத்தியம் செய் எனக் குறிப்பிட்டார். இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது பல சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நானி மீது ஸ்ரீ ரெட்டி கூறியிருப்பது கொடுமையான குற்றச்சாட்டு. நானியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இப்போது நானியை சுட்டிக்காட்டியவர் நாளை இன்னொரு பிரபலத்தை சுட்டுக்காட்டுவார். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்த வேண்டும். ஏதேனும் ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
