vishal

சற்றுமுன் நடந்த நேரலை பேட்டியில் திரு விஷால் அவர்கள் பைரசி வெப்சைட்டுகளை பற்றி ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

Vishalஇப்போது இருக்கும் திரைப்பட வரி விதிமுறையின்படி 100 ரூபாய்க்கு கீழே உள்ள டிக்கெட் கட்டணத்திற்கு 18% வரியும், 100 ரூபாய்க்கு மேலே உள்ள டிக்கெட் கட்டணத்திற்கு 28% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய விஷால்…

“பைரசி சைட்டுகளை மத்திய அரசு கட்டுப்படுத்துமேயானால் 28% வரியினை கட்ட தயாராக உள்ளோம்.

அதிகம் படித்தவை:  விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்

Airtel, Vodafone போன்ற இணைய சேவையை பயன்படுத்தி அனைவரும் வீட்டிலிருந்தே திரைப்படங்களை தரவிறக்கம் செய்து பார்த்துவிடுகின்றனர்.

பார்ன் சைட் எனப்படும் செக்ஸ் தளங்களை முடக்க நடவடிக்கை எடுத்து வரும் அரசு எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் பைரசி சைட்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்ன் சைட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சம் பைரசி சைட்டுக்கும் கொடுங்க…

அதிகம் படித்தவை:  விஜயிடம் எல்லாமே பிடிக்கும் அதுதான் எனக்கு பிடிக்காது - விஷால்

கேளிக்கை வரி பற்றிய எங்களது கோரிக்கைக்கு அரசிடமிருந்து விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்…

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: வரிய பத்தி பேசும்போது இவரு ஏன் திடீர்னு பார்ன் சைட்டு பத்தி பேசுறாரு? விஷால் மேல Airtel, Vodafone கேஸ் போடாட்டி சரி… ஊரு வம்பு நமக்கெதுக்கு…