Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய குருடி கதவை திறடி என மீண்டும் சுந்தர் சி இடம் தஞ்சமடைந்த விஷால்.. எப்படியாச்சும் ஹிட் கொடுங்க என புலம்பல்
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர் மற்றும் நடிகர்களை வெற்றி கூட்டணி என்று அழைப்பார்கள். ஆனால் இவர்களது கூட்டணியில் ஒரே ஒரு வெற்றிப்படத்தை மட்டும் கொடுத்து விட்டு நான்காவது முறையாக கூட்டு சேர உள்ளனர் சுந்தர் சி மற்றும் விஷால்.
முதன்முறையாக விஷால் மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்த படம் மதகஜராஜா. படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படம் தற்போது வரை பெட்டிக்குள்ளேயே முடங்கி விட்டது.
கொடுமை என்னவென்றால் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போதிலும் இந்த படத்தை வெளிக்கொண்டு வர முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்த படம் ஆம்பள. காமெடியை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் போட்டிக்கு பெரிய படங்கள் இல்லாததால் நல்ல வசூலை ஈட்டியது.
அதன் பிறகு மீண்டும் ஆக்சன் என்ற படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் நிலைமை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் நான்காவது முறையாக விஷால் மற்றும் சுந்தர் சி இருவரும் இணைய உள்ளனர்.
சுந்தர் சி தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாக படபிடிப்பிலும், விஷால் துப்பறிவாளன் மற்றும் சக்ரா போன்ற படங்களின் படப்பிடிப்பிலும் உள்ளனர். இவை அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்தான் விஷாலுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு துப்பறிவாளன் படம் சம்பந்தமாக ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
