நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது முதலே விஷாலுக்கும், சரத்குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், சரத்குமார் மீண்டும் விஷாலுடன் மோதுகிறார்.சாஹீத் கேதார் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திய படம் `சென்னையில் ஒருநாள்’.சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ராதிகா, பார்வதி, இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் உடல் உறுப்பு தானம் மற்றும் ஒரு உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியாக இருந்தது.vishal

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. நடிகர் சரத்குமார், அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், ராஜா சிம்ஹன், அஞ்சனா பிரேம், சாதன்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜே.பி.ஆர். இயக்கியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார்.

`சென்னையில் ஒருநாள் 2′ ரிலீசாகும் அதேநோளில் தான் விஷாலின் `துப்பறிவாளன்’ படமும், ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’ படமும் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.எனவே நடிகர் சங்கத் தேர்தலுக்கு பிறகு, சரத்குமார் – விஷால் படத்தின் ரிலீஸ் மூலம் நேரடியாக மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.