Tamil Cinema News | சினிமா செய்திகள்
தே*** என திட்டிய விஷால்.. பொறிக்கி என அவரின் முகத்திரையை கிழித்த மிஸ்கின்
துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் விஷாலுக்கும் மிஷ்கினுக்கு இடையே பெரிய போரே நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி தங்களை அசிங்கப்படுத்தி கொள்வது தமிழ்சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தடுமாறி வந்த விஷாலுக்கு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு இருவரும் இணைந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை pan-india சினிமாவாக உருவாக்க நினைத்துள்ளனர்.
இதனால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் லண்டனில் நடைபெறுவதை போல கதையை தயார் செய்து கிட்டத்தட்ட 75 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில்தான் திடீரென விஷால் மிஸ்கின் மீது தேவை இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
மிஸ்கின் அளவுக்கதிகமாக தயாரிப்புத் தரப்புக்கு செலவு வைப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதேபோல் மிஷ்கினும் விஷால் தன்னிடம் நடந்து கொண்ட முறைகளை பொது மேடையில் வைத்து கிழி கிழி என்று கிழித்து விட்டார்.
அனைத்துக்கும் உச்சகட்டமாக விஷால் மிஷ்கினின் அம்மாவை தே***யா என திட்டி அசிங்கபடுத்தியதாக பொதுமேடையில் கூறி வருத்தப்பட்டுள்ளார் மிஸ்கின். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தனது அம்மாவை தவறாகப் பேசுவதை மேடையில் சொல்லி அழ வேண்டிய அவசியமில்லை.
அப்படி மிஸ்கின் சொல்லும்போது மிஷ்கினை எந்த அளவுக்கு விஷால் காயப்படுத்தி இருக்கவேண்டும் என்ற எண்ணம் தெரியவந்துள்ளது. மிஸ்கின் படங்களை இயக்க நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக இருப்பதாக அவர்களே நேரடியாக தங்களது ஆதரவை மிஷ்கினுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஷாலின் முகத்திரை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவதாக சினிமாவைச் சேர்ந்த வட்டாரங்கள் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.
