விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு நடிகர் சங்கம் ஆதரவு !

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.

” பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் ,அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.

அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது “