Tamil Cinema News | சினிமா செய்திகள்
9 வருடங்களுக்கு பிறகு இணையும் விஷால் மற்றும் ஆர்யா படத்தின் டைட்டில் ரிலீஸ்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இரண்டு நடிகர்கள் ஒரே படங்களில் நடிப்பது சர்வசாதாரணமாக இருந்தது.
ஆனால் சமீபகாலமாக ஹீரோக்களின் தலைக்கனம் காரணமாக அப்படி எந்த படமும் வெளி வருவதில்லை.
ஒன்பது வருடங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் விஷால் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் விஷால் 30 படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

vishal-arya-cinemapettai
இந்நிலையில் நாளை மாலை விஷால் மற்றும் ஆர்யா தங்களது ட்விட்டர் பக்கங்களில் விஷால் 30 படத்தின் டைட்டிலை வெளியிட உள்ளார்களாம்.
