fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால்.. இருந்தாலும் உனக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திபா

vishal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால்.. இருந்தாலும் உனக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திபா

எம்எல்ஏ, எம்பி தேர்தல்களை விட உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்துவது நடிகர்களுக்குள் நடக்கும் தேர்தலில் தான். சினிமாவை விட மோசமான நாடகங்களை செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென அடித்துக் கொள்ளாத குறையாக சுவாரசியம் குறையாமல் இந்தத் தேர்தல் நடைபெறும்.

கடந்தமுறை விஷால் அணியினர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்று விஷால் இரண்டு சங்கங்களுக்கும் தலைவரானார். அதன்பிறகு தான் அவரின் சுயரூபம் வெளி வந்ததாக பல தயாரிப்பாளர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர்.

சமீபத்தில்கூட தயாரிப்பாளர் கே ராஜன் விஷால் 13 கோடி ஆட்டைய போட்டு விட்டதாக செய்திகளை கிளப்பி பரபரப்பை கூட்டினார். இந்நிலையில் மீண்டும் விஷால் எந்த தைரியத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார் என தெரியவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

சிக்கி சின்னா பின்னமாகி சீரழிந்து மானங்கெட்டு பெயரை கெடுத்துக் கொண்ட நம்ம விஷால், மீண்டும் போட்டி போட இருப்பது, மண்ணை கவ்வ போகிறோம் என்று தெரிந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.

கடந்த ஏப்ரல் மாதம் பழைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், அக்டோபர் 30ஆம் தேதிக்குள் அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் நீதி நியாயம் தர்மம் வெல்லுமா?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top