கேளிக்கை வரி என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும்.இந்தியாவில் சினிமா காட்சிகள், பெரிய வர்த்தக நிகழ்வுகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களும் கேளிக்கை வரி பட்டியலில் உள்ளவையாகும். கேளிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் உள்ளது.

இது முழுக்க முழுக்க மாநில அரசின் வருவாய் மூலமாகும். தமிழ் படம் மற்றும் மராட்டிய படங்களுக்கு முறையே தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசுகளால் கேளிக்கை வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

vishal

தமிழக அரசு 10% கேளிக்கை வரி வைத்துள்ளதை எதிர்த்து சினிமா துறையினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.வரும் வெள்ளிக்கிழமை (06.10.2017) முதல் எந்த படமும் வெளியிடப்பமாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது தமிழ் திரை படத்துறையில் ஏற்கனவே piracy  முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% GST, என பல்வேறு காரணத்தால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விவசாயத்தில் இறங்கிய விஷால் - அதிரடி முடிவு

இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27/9/2017 அன்று தமிழ் படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

thupparivaalan movie review

இதனால் இனி வரும் புதிய படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று உறுதியாக சொல்லிவிட்டார் விஷால்.

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.

இருந்தும் பல ஆண்டுகள் முறைபடுத்த படாமல் உள்ள திரையரங்கு கட்டணத்தினை ஒழுங்குபடுத்தாமல்  10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயரிப்பாளருக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும் ,குழப்பங்களை தொடர்ந்து ஏற்படுத்துகிறது.

அதிகம் படித்தவை:  விஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்’ படத்தின் ரிலீஸ்

இது சம்பந்தமாக நேற்று 03/10/2017 தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி திரையரங்கு கட்டணத்தினை முறைபடுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை  தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிவிட வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதனால் வருகிற வெள்ளி கிழமை  6/10/2017 முதல் புதிய தமிழ் திரை படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

தீபாவளிக்கு முன்பு இந்த பிரச்சனை தீராவிட்டால் விஜய் நடித்திருக்கும்  மெர்சல் படம் வெளிவருவதும் சந்தேகமே என கூறப்படுகிறது.எனவே விஜய் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள் இதற்கிடையில் விஜய்யின் மெர்சல் ட்ரைலர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

தீபாவளிக்குள் இந்த பிரச்சனை முடிஞ்சிடும் என்றும்  மெர்சல் ரிலீஸ் ஆகும் நாளை எண்ணிக்கொண்டு ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.