Videos | வீடியோக்கள்
வெளியான வீரமே வாகை சூடும் டீசர்.. சாமானிய மக்களுக்காக போராடும் விஷால்
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான எனிமி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதன்பிறகு விஷால் வீரமே வாகை சூடும் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இது சாமானிய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை களத்தை உருவாக்கி உள்ளனர். இதில் சாமானிய மக்களுக்காக போராடுபவராக விஷால் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
