visaranaiஆடுகளம் படத்துக்குப்  பிறகு ஏறக்குறைய ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் – விசாரணை.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற விசாரணை படம் பிப்ரவரி 5 வெளியானது.  பல பட விழாக்களில் விருது பெற்றாலும் விசாரணை படம் தமிழ்நாட்டில் ஓடுமா என்ற அச்சம் வெற்றிமாறனுக்கே இருந்தது.

இந்நிலையில், விசாரணை படத்துக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தைப் ஓடவைக்க விசாரணை படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்களிடம் அவர்களது வாழ்த்து மற்றும் பாராட்டுகளை பெற்று பேப்பர் விளம்பரம் செய்து வருகின்றனர். விசாரணை படம் வெளியாகி, முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 4.0 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

இதற்கிடையில், மும்பையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தேதி சப்-டைட்டிலுடன் விசாரணை வெளியாக இருக்கிறது.