bahubali-2விசாரணை” படத்தைப் பார்த்தவர்கள் அந்த கொடுமைக்கார இன்ஸ்பெக்டரை மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அஜய் கோஷ்.

தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்தவரை “விசாரணை” படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி 2″ படத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஜய் கோஷ்.

கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.