Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

தன் உத்தேச உலகக்கோப்பை அணியை வெளியிட்ட வீரேந்தர் சேவாக். ஒரு தமிழக வீரர் உள்ளே.

2015 இல் ஆடிய டீம்முடன் ஒப்பிட்டு அதே வீரர்களுக்கு மாற்றாக யார் எனவும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சேவாக்.

விரேந்தர் சேவாக் தன் ஓய்விற்கு பின் எடுத்துள்ளதோ பல அவதாரங்கள், ஹிந்தியில் வர்ணனையாளர், ஐபில் பஞ்சாப் அணியின் கோச், விளம்பரங்களில் நடிப்பது, தன் ஸ்கூலின் முழு நிர்வாகப்பொறுப்பை மேற்கொள்வது, என்று மனிதர் ஏக பிஸி. இவ்வளவு பிஸியிலும் மனிதர் தன் ட்விட்டரில் ஆக்ட்டிவாகவே இருப்பார். இவருக்கு 18 .1 மில்லியன் பாலோயர்ஸ் உண்டு.

இந்நிலையில் இவர் தன் உத்தேச இந்திய உலகக்கோப்பைக்கான அணியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கனவு அணி விபரம்:

விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார்
முகமது சமி,  கேதார் ஜாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்,
சஹால், விஜய் சங்கர், பும்ரா, ரிஷப் பண்ட.

2015ம் ஆண்டு விளையாட சென்ற 7 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 8 புதிய வீரர்களை அவரின் கனவு அணி பட்டியலில் சேர்த்துள்ளார்.

Virender Shewag WORLD CUP SQUAD

உலகக்கோப்பை இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top