fbpx
Connect with us

இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்! சீனியர் வீரர்கள் மீது நம்பிக்கை இல்லை.. பிரபலம் வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு!

indian-team

Sports | விளையாட்டு

இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்! சீனியர் வீரர்கள் மீது நம்பிக்கை இல்லை.. பிரபலம் வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு!

தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதது ஏன் என்று விரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ஐபிஎல்-லில் மும்பை அணி பல வெற்றிகளை குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக அவதிப்படுகிறார்.

மேலும் அவர் ஆஸ்திரேலியா செல்லும் அணியில் தேர்வாகவில்லை. இதற்கு ரோஹித் சர்மா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓய்வு  உடன் மருத்துவ பரிசோதனையில் இருக்கவேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதற்கு அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பல கேள்விகளை எழுப்பி உள்ளார். மேலும் சேவாக் காலத்தில் ஒரு வீரருக்கு காயம் என்றால் அவரை மொத்தமாக நீக்க மாட்டார்கள்.

மேலும் பெரிய தொடர் நடக்கும் சமயங்களில் அவரை தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆட விட மாட்டார்கள். காயம் சரியானால் மீண்டும் அணிக்குள் கொண்டு வருவார்கள்.

மேலும் ஆசிய தொடர் ஒரு மாத காலம் வரை நடைபெற உள்ளது. ஆகையால் ரோஹித் நினைத்தால் அதற்குள் அணிக்குள் தேர்வாக முடியும்.

ஆனால் ஏன் அவரை மொத்தமாக நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அவரிடம் இந்திய தேர்வுக்குழு கடுமையாக செயல்பட்டுள்ளது. ஏதோ தவறு நடக்கிறது? அதேபோல் ரோஹித்திற்கு ஏற்பட்ட காயம் குறித்த சரியான விபரமும் தெரியவில்லை.

Virender Shewag

Continue Reading
To Top