இந்தியாவின் கவர்ச்சி நாயகி சன்னி லியோனுடன் ஒரு புகைப்படமாவது எடுத்து கொள்ள வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கும் நிலையில், சன்னி லியோன் அருகிலேயே அமரும் வாய்ப்பு இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சேவாக்கிற்கு கிடைத்துள்ளது.

அட., ஆமாங்க ஐ.பி.எல் பத்தாவது சீசனில் ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று நடைபெறும் பஞ்சாப் டெல்லி இடையேயான லீக் போட்டியை “UC NEWS” சார்பில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் மசாலா கமெண்டரி செய்ய உள்ளாராம். இதற்காக தனக்கு ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் துணை தேவை  என்று சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சன்னி லியோனின் டீவிட்டை எப்படியோ பார்த்துவிட்ட நம்ம சேவாக் தானாக முன்வந்து உங்களோடு சேர்ந்து கமெண்டரி செய்ய நான் ரெடி.., நான் வர்றேனு தானாக முன்வந்து அட்டண்டன்ஸ் போட்டுள்ளார்.