Sports | விளையாட்டு
சினிமாவில் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கிறாரா விராட் கோலி ? வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
விராட் கோலி
இன்றைய நெக்ஸ்ட் ஜென் கிரிக்கெட்டர்களில் முக்கியமானவர். தன் பிட்னஸ் , கடின உழைப்புக்கு பெயர் போனவர். அணைத்து வகை பார்மட்டிலும் அசத்துபவர். ஒரு பக்கம் கிரிக்கெட் , மறுப்பக்கம் தன் மனைவி மற்றும் குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவது என்று இருப்பவர். இவருக்கு மூன்றாவது முகமும் உண்டு. அது தான் விளமபரங்கள் மற்றும் ப்ராண்ட் வால்யூ உருவாக்குவது. கிரிக்கெட்டில் சம்பாரிப்பதை விட , இதில் மனிதர் அதிகம் சம்பாதிக்கிறார் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விராட் துப்பாக்கி வைத்தது போன்ற போட்டோ ஒன்று இணையத்தில் வெளியானது, பலரும் படத்தில் தான் நடிக்கிறார் கோலி, அது அவரின் பயோபிக் என்று கிசு கிசுத்தனர்.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் விராட். மேலும் 10 வருடங்கள் கழித்து அடுத்த அறிமுகம் என்றும் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Virat Kohli
இப்போஸ்டரில் wrogn ப்ராண்ட் உடையில் சூப்பர் ஹீரோ போல மிதக்கிறார். மேலும் ‘ட்ரைலர் தி மூவி’ வரும் செப்டம்பர் 28 ரிலீசாகிறது என்று சொல்லி, இனையதள லிங்க்கும் கொடுத்துள்ளனர். வேறு இந்த தகவலும் இல்லை, பலரும் சினிமாவா, வீடியோ கேமா , இணையத்தில் ஏதும் லைவ் சாட் ஷோவா, அல்லது ஏதும் மிந்த்ரா, பிளிப்கார்ட் ஸ்டைலில் ஆன்லயன் ப்ராண்ட் ஆக இருக்குமோ என்று குழம்பி வருகின்றனர்.
இன்னமும் 6 நாட்கள் காத்திருப்போம், அது என்னவென்று தெரிந்துகொள்ள…..
