பெங்களூரு: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி புதிதாக ரெஸ்டாரண்ட் துவங்கியுள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டியில், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோலி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்ந்லையில், தனது விளம்பரதாரர் நிறுவனத்தின் துணையுடன், பெங்களூரு கேப்டன் விராட் கோலி, புதிதாக ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்று துவங்கியுள்ளார். இதில் பெங்களூரு அணி வீரர்கள் அனைவருக்கும் விருந்து அளித்துள்ளார். இதை அவரது சக வீரரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் வைத்துள்ள நாடுகள் எவை தெரியுமா ?