தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ளே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன் நடந்த பிசிசிஐ தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் இந்திய அணி கேப்டன் கோலி, பயிற்சியாளர் கும்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தங்களுக்கு 150% சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோலி வலியுறுத்தியுள்ளனர்.

மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியத்தை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிக அதிகமாக லாபம் கிடைத்து வருகின்றது. அப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவின் சிறிய வீரருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட இந்திய முன்னனி வீரர்களுக்கு குறைவாக வழங்கப்படுகின்றது. இதனால் உடனடியாக சம்பள உயர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்திய பயிற்சியாளர்களிலேயே, இதுவரை இல்லாத அளவிற்கு அதிக சம்பளம் கும்ளேக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 6 கோடி சம்பளத்திற்கு பதிலாக 8 கோடி வழங்கப்படுகின்றது. தற்போது கும்ளே, தன்க்கு 30% சம்பள உயர்வு வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ,பி,சி என மூன்று நிலைகளில் வீரர்களின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏ கிரேட் வீரர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி சம்பளம் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சம், டி20யில் விளையாட 3 லட்சம் சம்பளம் வழங்கப்படுகின்றது.