fbpx
Connect with us

Cinemapettai

கோலிக்கு spirit of cricket விருது வழங்கப்பட்டதுக்கு இது தான் காரணம்.. வீடியோ உள்ளே

virat-kohli-angry

Sports | விளையாட்டு

கோலிக்கு spirit of cricket விருது வழங்கப்பட்டதுக்கு இது தான் காரணம்.. வீடியோ உள்ளே

விராட் கோலி இந்திய கிரிக்கெட் டீம்மை வேறு விதமான பரிணாமத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.  கோலி தலைமையில் இந்தியா டீம் வேற லெவல். கோலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டன், மனதில் பட்டத்தை சொல்பவர், செய்பவர். அது மைதானத்திற்கு உள்ளே அல்லது வெளியேவாக இருக்கட்டும், அது தான் அவரின் ஸ்டைல்.

இந்த 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் கோலிக்கு கிரிக்கெட்டின் விளையாட்டு உணர்வை (ஸ்பிரிட்) காத்த வீரர் என்ற விருதை கொடுக்கவுள்ளனர். நடுவரிடம் வாக்குவாதம், எதிர் டீம் வீரர்களிடம் ஆக்ரோஷமான பேச்சு, பார்வை என இருக்கும் இவருக்கு எப்படி என ஒரு சிலர் குழம்பி போய் தான் இருப்பீர்கள்.

கடந்த உலகக்கோப்பை  போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் கிரிக்கெட்க்கு திரும்பிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னரை ரசிகர்கள் மோசமாக நடத்தினர், மேலும் குரல் எழுப்பினர். அந்த சமயத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக செயல்பட்ட, பேசிய  விராட் கோலிக்கு சிறந்த வீரருக்கான spirit விருது வழங்கப்பட்டது.

சில மோசமான சம்பவங்களுக்காக தனது பெயர் அடிபட்ட காரணத்தால் விளையாட்டு உணர்வுடன் செயல்பட்ட வீரருக்கான விருதில் தனது பெயர் இடம் பெற்றதை நம்பமுடியவில்லை என கோலி சொல்லியுள்ளார்.

https://twitter.com/ICC/status/1217401216562606082

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top