Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணத்திற்கு முன் அசரவைக்கும் அழகிகளுடன் டேட்டிங் செய்த விராட் கோலி.. ஆத்தி எம்புட்டு பெரிய லிஸ்ட்டு!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தான் விராட் கோலி. தற்போது இந்திய அணியின் கேப்டனும் இவரே.
மேலும் விராட் கோலி திருமண வாழ்க்கையில் அனுஷ்கா ஷர்மாவின் கரம் பிடிப்பதற்கு முன்பு ஐந்து தோழிகளுடன் டேட்டிங் செய்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.
இருப்பினும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒருபோதும் காதல் வாழ்க்கை பாதிக்காத வண்ணம் டிராக் போட்டு, சரியாக வண்டியையும் நகர்த்தினார்.
விராட்கோலி அனுஷ்காவை திருமணம் செய்வதற்கு முன்பு டேட்டிங் செய்த பெண்களின் பட்டியல்:
1.சாக்ஷி அகர்வால்: தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகையான சாக்ஷி அகர்வால் விராட் கோலியுடன் சிலகாலம் டேட்டிங் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இந்த உறவு தோன்றி உள்ளது. மேலும் இவரே விராட் கோலியின் முதல் காதலி.
2. சாரா ஜேன் தியாஸ்: ஃபெமினா மிஸ் இந்தியா வின்னரான சாரா, விராட் கோலியின் இரண்டாவது காதலி ஆவார். கோலி சாராவை உலகக் கோப்பை இறுதிபோட்டிக்கு தன்னை உற்சாகப்படுத்த அழைத்தபோது சாரா வர மறுத்ததால் 2011ஆம் ஆண்டு இவர்களது உறவு முடிவுக்கு வந்தது.
3. சஞ்சனா கல்ராணி: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகையான சஞ்சனா, கோலியுடன் டென்னிஸ் விளையாடுவது, லாங் டிரைவ் செல்வது என பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக காணப்பட்டதால் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. எனினும் கல்ராணி இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும், அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
4. தமன்னா பாட்டியா: இந்திய சினிமாவின் பாலிவுட்டில் 15 வயதில் அறிமுகமான நடிகை தான் தமன்னா. கோலியும் தமன்னாவும் ஒரே விளம்பரத்தில் நடித்த பிறகு 2012ல் டேட்டிங்கில் இருந்தனர். கோலி இசபெல் லைட்டை சந்தித்ததால் அவர்களது உறவு முடிவுக்கு வந்தது.
5. இசபெல் லைட்: பிரேசில் மாடல் நடிகையான லைட் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். ஒரு விருந்தில் கோலியை சந்தித்த இசபெல் காதல் வயப்பட்டு, டேட்டிங் செய்தார்கள். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்த இருவரும் திடீரென்று பிரிந்துவிட்டனர்.
6. அனுஷ்கா ஷர்மா: பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா ‘ஹெட் அண்ட் ஷோல்டீர்ஸ்’ விளம்பரத்தில் விராட் கோலியுடன் சேர்ந்துநடித்த பிறகு இருவரும் காதல் வயப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது காதல் இத்தாலியில் கை கோர்த்தது.

virat-kohli-anushka
